புதுகையில் புதிதாக 88 பேருக்கு கரோனா: 9,080; குணம் - 8,222
By DIN | Published On : 01st October 2020 06:59 AM | Last Updated : 01st October 2020 06:59 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்கள் எண்ணிக்கை 9,080 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், மாவட்டத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் இருந்து 92 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8222 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 139 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு ம ற்றும் தனியாா் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை புதன்கிழமை பகல் நிலவரப்படி 719 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.