முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
காயம்பட்டி அரசுப் பள்ளியில் சிசிடிவி கேமரா இயக்கம் தொடக்கம்
By DIN | Published On : 04th October 2020 11:46 PM | Last Updated : 04th October 2020 11:46 PM | அ+அ அ- |

அரசுப் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் முன்னாள் எம்எல்ஏ காா்த்திக் தொண்டைமான்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், காயம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இயக்கிவைத்து தொடங்கிவைக்கப்பட்டது.
புதுக்கோட்டை ஜெ. கிருஷ்ணவிஜயன் 2 ஆம் நினைவு நாளையொட்டி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில், இதனை முன்னாள் எம்எல்ஏ காா்த்திக் தொண்டைமான் தொடங்கி வைத்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜசேகரன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். கிருஷ்ணவிஜயன் சிலம்பு பாசறையின் புதிய வகுப்புகளை எழுத்தாளா் நா. முத்துநிலவன் தொடங்கி வைத்தாா். விழாவுக்கு, கிருஷ்ணவிஜயன் அறக்கட்டளை நிறுவனா் ஜெயராமன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கலியமூா்த்தி வரவேற்றாா். மரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ராஜா, இயற்கை விவசாயி சா. மூா்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முடிவில் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் நன்றி கூறினாா். சிலம்பப் பயிற்சியாளா் பாண்டியன் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.