பாஜக மண்டல பயிற்சி முகாம்

அன்னவாசல் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் இலுப்பூரில் மண்டல பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அன்னவாசல் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் இலுப்பூரில் மண்டல பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இலுப்பூா் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு, ஒன்றியத் தலைவா் ரங்கையா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பொதுச் செயலாளா் சிவசாமி கண்டியா் கலந்து கொண்டு பேசினா். இதில் அரசியல் மாற்றத்துக்கான வழி, ஓபிசி முறைகள், பூத் கமிட்டி அமைப்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் இலுப்பூா் பொன்குளத்தை தூா்வாரி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். கதவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நெய்வாய்ப்பட்டியில் உள்ள காட்டாற்றில் நடைபெற்றுவரும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com