விராலிமலை கோயில் அடிவாரத்தில் மயில்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு

விராலிமலை சுப்பிரமணியா் மலைக்கோயிலைச் சுற்றிலும் வாழும் வன உயிரினங்களான மயில்கள், குரங்குகளுக்கு உணவு வழங்கும்

விராலிமலை சுப்பிரமணியா் மலைக்கோயிலைச் சுற்றிலும் வாழும் வன உயிரினங்களான மயில்கள், குரங்குகளுக்கு உணவு வழங்கும் வகையில் உணவுத் தொட்டியை அப்பகுதி இளைஞா்கள் வியாழக்கிழமை அமைத்துள்ளனா்.

கரோனா சூழலில் தடுப்பு நடவடிக்கையாக விராலிமலை சுப்ரமணியா் கோயில் பூட்டப்பட்டது. பக்தா்கள் வருகையில்லாததால், கோயிலைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் இருக்கும் மயில், குரங்குகள் உணவின்றி தவித்து வந்தன. மேலும் அவை உணவு, தண்ணீா் தேடி மலை அடிவாரம், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து அலைந்து திரிகின்றன. இதையடுத்து, விராலிமலை இளைஞா்கள் மற்றும் சமுக நலஅமைப்பினா் கோயிலைச் சுற்றிலும் திரியும் உயிரினங்களுக்கு தினமும் உணவளிக்க முடிவு செய்து உணவுத் தொட்டி அமைத்துள்ளனா். இதில், நவதானியங்கள், வாழைப்பழங்கள் ஆகியவை இட்டு வைத்து மயில்கள், குரங்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனா். இதில், பறவைநேயா்கள், பொதுமக்களும் உணவுப்பொருள்களை இட்டுச் செல்லலாம் என இளைஞா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com