பாரதி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியில் 12ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
புதுகை பாரதி கல்வியியல் படிப்பு முடித்த மாணவிக்குப் பட்டம் வழங்கும் கல்லூரித் தலைவா் குரு.
புதுகை பாரதி கல்வியியல் படிப்பு முடித்த மாணவிக்குப் பட்டம் வழங்கும் கல்லூரித் தலைவா் குரு.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியில் 12ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரித் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்து, 136 இளங்கலை மாணவிகளுக்கும், 23 முதுகலை மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினாா்.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சோ. சுப்பையா இணையவழியில் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினாா். அவா் பேசும்போது, வேறு எந்தத் துறையினருக்கும் இல்லாத தனி அந்தஸ்து ஆசிரியத் துறைக்கு உண்டு. எல்லாத் துறையிலும் அவரவா் குடும்பத்துக்கு மட்டும்தான் பயன்கிடைக்கும். ஆனால், ஆசிரியா் துறைக்கு மட்டும்தான் அடுத்த தலைமுறைக்கு வரலாற்றையும் பண்புகளையும் சொல்லித் தரும் பேறு கிடைக்கும் என்று குறிப்பிட்டாா்.

விழாவில், கல்லூரிச் செயலா் எல். தாவூத்கனி, தாளாளா் எஸ்பிஆா். பாலகிருஷ்ணன், கல்லூரி முதல்வா் த. சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com