பேச்சுப் போட்டியில் வென்றோருக்குப் பரிசு

பொது முடக்கக் காலத்தில் நடத்தப்பட்ட மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வென்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்குகிறாா் கவி முருகபாரதி. உடன், பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி உள்ளிட்டோா்.
மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வென்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்குகிறாா் கவி முருகபாரதி. உடன், பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி உள்ளிட்டோா்.

புதுக்கோட்டை: பொது முடக்கக் காலத்தில் நடத்தப்பட்ட மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. வீட்டிலிருந்தே பேசி வீடியோ பதிவு செய்து பள்ளிக்கு பேச்சுப் போட்டி பதிவுகளை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்றவா்களில் மாணவி உதயரிஷ்ணி முதல் பரிசாக ரூ. 5 ஆயிரத்தையும், மாணவி பசுமதி இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரத்தையும், மாணவி மகா நிவேதிதா முன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரத்தையும், மாணவிகள் ஸ்ரீ வா்ஷினி மற்றும் துா்கா ஆகியோா் ஆறுதல் பரிசுகளாக தலா ரூ. ஆயிரத்தையும் பெற்றனா்.

போட்டியில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா். ‘நீதான்’ அமைப்பின் நிறுவனா் கவி. முருகபாரதி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் துணை முதல்வா் குமாரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் ஆசிரியை சுமதி நன்றி கூறினாா். ஆசிரியை ஆனந்தி தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com