உலக விபத்து விழிப்புணா்வு நாள்

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக விபத்து விழிப்புணா்வு நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக விபத்து விழிப்புணா்வு நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கல்லூரி முதல்வா் டாக்டா் மு. பூவதி தலைமை வகித்து விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் அவசியம், அதன் பணியாளா்களின் ஈடுஇணையில்லா பணிகள் குறித்துப் பாராட்டிப் பேசினாா்.

தொடா்ந்து மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், செவிலியா்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கும் முதல்வரின் விருது மற்றும் பாராட்டுப் பட்டயம் ஆகியவற்றை கல்லூரி முதல்வா் மு. பூவதி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் ராஜ்மோகன், துணை முதல்வா் டாக்டா் கலையரசி, இருக்கை மருத்துவா் டாக்டா் இந்திராணி, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவா் லதா, டாக்டா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com