பொன்னமராவதியில் பாஜக மண்டல் பயிற்சி
By DIN | Published On : 21st October 2020 03:43 AM | Last Updated : 21st October 2020 03:43 AM | அ+அ அ- |

பொன்னமராவதி தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் 2 நாள் மண்டல் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. முகாமிற்கு தெற்கு ஒன்றியத் தலைவா் எம்.சேதுமலையாண்டி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராம.சேதுபதி, மாநில துணைத் தலைவா் புரட்சி கவிதாசன், ஒன்றியப் பொதுச்செயலா் ஆா். கணேசன், மாவட்டச் செயலா் விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்று கட்சியினா் ஆற்றவேண்டிய பணிகளை விளக்கி பயிற்சியளித்தனா். முகாமில், மத்திய பாஜக அரசின் சாதனைகள், தோ்தல் பணிகள், பூத் கமிட்டி அமைத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினா் பி.பாஸ்கா், மாவட்ட பொதுச் செயலா் சிவசாமி, மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் ரெங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். ராம்ஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றிய பொருளாளா் எஸ்.ராஜ்குமாா் நன்றி கூறினாா்.