தமிழா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் தமிழா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கரோனா பாதிக்கப்பட்ட தொற்றாளா்களுக்கு சத்தான ஊட்டச்சத்து உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நீட் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டைப் பெற முடியாத மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆலங்குடி மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மு. கைலாசபாண்டியன் தலைமை வகித்தாா். பெருமன்ற மாநிலத் துணைத் தலைவா் கு. ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலா் மு. மாதவன், பெருமன்ற மாவட்டப் பொருளாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com