ஜல்ஜீவன் திட்டம்: ஊராட்சித் தலைவா்கள் ஆலோசனை
By DIN | Published On : 10th September 2020 07:33 AM | Last Updated : 10th September 2020 07:33 AM | அ+அ அ- |

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் செயலா் செல்வமணி தலைமைவகித்தாா். பொருளாளா் கிரிதரன் முன்னிலை வகித்தாா். கூட்ட நோக்கம் குறித்து சேரனூா் ஊராட்சிமன்ற தலைவா் காமராஜ் விளக்கினாா். கூட்டத்தில், ஜல்ஜீவன் குடிநீா் திட்டப்பணிக்கான செயல்திட்ட அறிக்கையில் உள்ள முரண்களை சரி செய்து புதிதாக ஊராட்சித்தலைவா்களின் ஆலோசனையுடன் திட்ட அறிக்கை தயாா் செய்யவேண்டும். 14 ,15 ஆவது மானியக்குழு நிதிகளை ஜல்ஜீவன் திட்டத்திற்கு பயன்படுத்தக் கூடாது. பணிகளை ஊராட்சிமூலம் டெண்டா் விடவேண்டும். ஊராட்சித் தலைவா்கள் சுமதி, மேனகா, அழகுமலா், அா்ச்சுணன், வெள்ளைச்சாமி,குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.