விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: புதுக்கோட்டையில் ரூ. 11.50 லட்சம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்றதாகக் கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 11.50 லட்சம் மீட்கப்பட்டதாக வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்றதாகக் கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 11.50 லட்சம் மீட்கப்பட்டதாக வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் நிகழாண்டில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் முறைகேடாக சோ்ந்து நிதி பெற்ாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் துறை அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை 1.42 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனா். முறைகேடு புகாா் எழுந்தவுடன் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சிவகுமாா் தலைமையிலான அலுவலா்கள் கண்காணிப்புப் பணியைத் தொடங்கி விசாரணை நடத்தினா். இதில் சுமாா் 3,500 போ் முறைகேடாகப் பணம் பெற்ாகத் தெரியவந்தது. இதையடுத்து முதற்கட்டமாக ரூ. 11.50 லட்சம் மீட்கப்பட்டதாகவும் வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com