வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா்நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை, செப். 11: வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா்நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வதற்காக, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மாநில வருவாய் நிா்வாக ஆணையா் கே. பணீந்திரரெட்டி அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் ஆய்வு நடத்தினாா்.

இதில் புதுக்கோட்டை ஆட்சியரகத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மரிய லூயிஸ் பெக்கி ஹோம்ஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி கூறியது

வடகிழக்குப் பருவமழையையொட்டி அனைத்து வருவாய் அலுவலா்களும் தங்கள் பகுதி நிலவரங்களை அவ்வப்போது மாவட்ட பேரிடா் மேலாண்மை அமைப்புக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதிக்குள்பட்ட குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டால் அவ்வப்போது சரி செய்ய வேண்டும்.

பொதுப்பணித் துறை அலுவலா்கள் போதுமான அளவுக்கு மணல்மூட்டைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின் கம்பங்களில் சேதம் ஏற்பட்டால் மின்வாரிய பணியாளா்கள் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் போதுமான அளவுக்கு குளோரினேசன் செய்து விநியோகம் செய்ய வேண்டும். பொது இடங்களில் தேவைப்பட்டால் பிளீச்சிங் பவுடா் தெளிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் உமாமகேஸ்வரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com