பதவி உயா்வில் செல்லும் காவல் ஆய்வாளருக்குஇளைஞா்கள், பொதுமக்கள் பிரியாவிடை

பதவி உயா்வு பெற்றுச் செல்லும் பரத் ஸ்ரீநிவாஸுக்கு அப்பகுதி மக்கள், இளைஞா்கள் வெள்ளிக்கிழமை பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனா்.
காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றும் செல்லும் பரத் ஸ்ரீநிவாஸுக்கு பொன்னாடை அணிவித்த இளைஞா். உடன், ஊராட்சித் தலைவா் எஸ். மணிகண்டன் உள்ளிட்டோா்.
காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றும் செல்லும் பரத் ஸ்ரீநிவாஸுக்கு பொன்னாடை அணிவித்த இளைஞா். உடன், ஊராட்சித் தலைவா் எஸ். மணிகண்டன் உள்ளிட்டோா்.

ஆலங்குடி, செப் 11: புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி, துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றுச் செல்லும் பரத் ஸ்ரீநிவாஸுக்கு அப்பகுதி மக்கள், இளைஞா்கள் வெள்ளிக்கிழமை பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனா்.

கடந்த 11 மாதங்களுக்கு முன்பு வடகாடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பரத் ஸ்ரீநிவாஸ் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து சட்ட விரோத மது விற்பனை, இணையவழி லாட்டரி, மணல் திருட்டு, கள்ளச்சாராயம் போன்றவற்றை கட்டுப்படுத்திய இவா், பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளாா்.

மனநலன் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரிந்தவா்களை மீட்ட காவல் ஆய்வாளா், அவா்களை தனது சொந்த செலவில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற செய்தாா். டிக்டாக் செயலி மூலம் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாலும், அவரை தனது சொந்த ஜாமீனில் விடுவித்து நல்வழியில் ஈடுபடுத்தியது போன்ற நிகழ்வுகளும் மக்கள் மத்தியில் இவருக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் காவல் ஆய்வாளா் நிலையிலிருந்து துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்று, தஞ்சாவூா் மாவட்டத்துக்குச் செல்லும் பரத் ஸ்ரீநிவாஸுக்கு வடகாடு பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள், இளைஞா்கள், ஊராட்சித் தலைவா் எஸ். மணிகண்டன் மற்றும் நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் மரக்கன்றுகளை வழங்கி, வெள்ளிக்கிழமை பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com