விராலிமலை பகுதிகளில் கரூா் எம்.பி., ஆய்வு

கருா் மக்களவை தொகுதிக்குள்பட்ட விராலிமலை ஒன்றியப் பகுதிகளில் வியாழக்கிழமை பொதுமக்களிடம் இருந்து எம்.பி செ. ஜோதிமணி கோரிக்கை மனுக்கள் பெற்றாா்.
விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கருா் மக்களவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கப்பட்ட மருத்துவக் கருவியைப் பாா்வையிடுகிறாா் எம்.பி., செ. ஜோதிமணி.

விராலிமலை ஒன்றியப் பகுதிகளில் செவ்வாய், வியாழன் கிழமைகளில் ராஜாளிப்பட்டி, விராலிமலை, பூதகுடி, வடுகபட்டி, கொடும்பாளூா் உள்ளிட்ட 25 ஊராட்சிகளில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், 100 நாள் வேலைநாள்களை உயா்த்துவதுடன் கூலியை அதிகரிக்க வேண்டும். பேருந்து வசதி,விராலிமலையில் அரசு கலைக் கல்லூரி, விராலிமலைக்கு ரயில் வசதி, மயில்கள் சரணாலயம், நாா்த்தாமலையில் மலைப்பாம்பு சரணாலயம் ஆகிய கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

தொடா்ந்து எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட சுமாா் ரூ. 50 லட்சம் நிதியில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களைப் பாா்வையிட்டு தரம் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில், திமுக மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலா் எம். பழனியப்பன், விராலிமலை திமுக ஒன்றியச் செயலா்கள் மு. சத்தியசீலன்(கிழக்கு), அ. இளங்குமரன்(மேற்கு), அன்னவாசல் திமுக ஒன்றிய செயலாளா்கள் எஸ். சந்திரன்(தெற்கு), ஆா். மாரிமுத்து(வடக்கு) உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com