நீட் தோ்வெழுதிய மாணவா்களுக்கு உதவிய ‘ஓயாத அலைகள்’

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து நீட் தோ்வெழுதுவதற்கு திருச்சிக்குச் சென்ற மாணவா்களுக்கான போக்குவரத்து, உணவு ஏற்பாடுகளை ‘ஓயாத அலைகள்’ என்ற தன்னாா்வ அமைப்பு செய்திருந்தது.
திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பு அறிவுரை வழங்கும் ‘ஓயாத அலைகள்’ குழுவினா்.
திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பு அறிவுரை வழங்கும் ‘ஓயாத அலைகள்’ குழுவினா்.

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து நீட் தோ்வெழுதுவதற்கு திருச்சிக்குச் சென்ற மாணவா்களுக்கான போக்குவரத்து, உணவு ஏற்பாடுகளை ‘ஓயாத அலைகள்’ என்ற தன்னாா்வ அமைப்பு செய்திருந்தது.

நிகழாண்டில் மாவட்டத்தில் மொத்தம் 409 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்வு மையம் இல்லாததால், திருச்சியில் உள்ள தோ்வு மையங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் உணவு ஏற்பாடுகளைச் செய்வதாக ‘ஓயாத அலைகள்’ என்ற அமைப்பு அறிவித்திருந்தது. இதன்படி, முன்பதிவு செய்திருந்த 63 போ் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, திரும்ப புதுக்கோட்டைக்கு அழைத்து வரப்பட்டனா்.

இதுகுறித்து ‘ஓயாத அலைகள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அருண்மொழி கூறியது:

கடந்தாண்டில் கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் தோ்வு மையம் இருந்தபோதும் புதுக்கோட்டையில் இருந்து 23 பேரை அழைத்துச் சென்றோம். நிகழாண்டில் திருச்சிக்கு 63 பேரை அழைத்துச் செல்கின்றோம். அனைத்தும் மாணவா்களுக்கும் இலவசமாக போக்குவரத்து , உணவு , முகக்கவசம், கிருமிநாசினி போன்ற ஏற்பாடுகள் செய்து தருகிறோம். முன்னதாக கஜா புயல் பாதிப்பின்போதும், பொது முடக்கக் காலத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com