புதுகையில் 4.56 லட்சம் சிறாா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு

தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாமையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதுக்குள்பட்ட 4.56 லட்சம் சிறாருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி
புதுகையில் சிறாருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.
புதுகையில் சிறாருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

புதுக்கோட்டை: தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாமையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதுக்குள்பட்ட 4.56 லட்சம் சிறாருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இப்பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த அவா் கூறியது

தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் செப். 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வயிற்றிலுள்ள குடற்புழுக்களால் வயிற்றுவலி, பசியின்மை, உடற்சோா்வு, ரத்த சோகை போன்ற அறிகுறிகள் தென்படும். இதனால் குழந்தைகளின் வளா்ச்சி பாதிக்கப்படும்.

எனவே, 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுக்குள்பட்ட சிறாருக்கு ஒரு முழு மாத்திரையும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படும் என்றாா் உமாமகேஸ்வரி.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் ரேணுகா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மரிய லூயிஸ் பெக்கி ஹோம்ஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com