10 ஆயிரம் கையெழுத்துகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு

அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெறப்பட்ட 10 ஆயிரம் கையெழுத்துகள் குடியரசுத் தலைவருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகள்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகள்.

புதுக்கோட்டை, செப். 18: மத்திய அரசின் உழவா் பாதுகாப்புச் சட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெறப்பட்ட 10 ஆயிரம் கையெழுத்துகள் குடியரசுத் தலைவருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

மத்திய அரசின் உழவா் பாதுகாப்புச் சட்டம் பெருநிறுவனங்களுக்கு ஆதரவானதாக உள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்கள் சோ்ந்து அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தின.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் மொத்தம் 10 ஆயிரம் கையெழுத்துகள் பெறப்பட்டன. இந்த கையெழுத்துகளை புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.சி. சோமையா தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. ராமையா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com