பொன்னமராவதி ஒன்றியக் குழுக் கூட்டம்
By DIN | Published On : 19th September 2020 12:05 AM | Last Updated : 19th September 2020 12:05 AM | அ+அ அ- |

பொன்னமராவதி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
பொன்னமராவதி, செப்.18: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவா் அ.சுதா அடைக்கலமணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.வெங்கடேசன், வி.வேலு முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வரவு- செலவு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு, வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சாலை, குடிநீா், உள்ளிட்ட தங்கள் பகுதி சாா்ந்த கோரிக்கைகளை சமா்ப்பித்து பேச, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அதற்கு பதில் அளித்தனா்.
மாவட்டக் குழு உறுப்பினா் பாண்டியன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் அ.தனலெட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அ. அடைக்கலமணி, க. முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.