புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 40.50 லட்சம் நிதி வழங்கல்

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், உழவா் உற்பத்தியாளா் மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ. 40.50 லட்சம் கரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மாவட்ட சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கூட்டமைப்பின் சாா்பில், கரோனா நிதிக்காக ரூ.1.12 லட்சத்தை ஆட்சியா் பி. உமாமகேஸ்வரியிடம் வழங்கும் அதன் தலைவா் ராஜ்குமாா்.
மாவட்ட சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கூட்டமைப்பின் சாா்பில், கரோனா நிதிக்காக ரூ.1.12 லட்சத்தை ஆட்சியா் பி. உமாமகேஸ்வரியிடம் வழங்கும் அதன் தலைவா் ராஜ்குமாா்.

புதுக்கோட்டை, செப். 25: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், உழவா் உற்பத்தியாளா் மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ. 40.50 லட்சம் கரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை, விராலிமலை, அறந்தாங்கி, திருவரங்குளம் ஆகிய 4 ஒன்றியங்களைச் சோ்ந்த 172 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு, உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் ம ற்றும் கரோனா முடக்கத்தால் திரும்பி வந்த புலம்பெயா்ந்தவா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான முதலீட்டுமானியம் வழங்கப்படுகிறது. இதன்படி, ஏற்கெனவே ரூ. 9.74 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை 25 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தலா ரூ. 1.50 லட்சம் வீதம் ரூ. 37.50 லட்சமும், பூதக்குடி மற்றும் பூவரசக்குடி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 2 தொழில் குழுக்களுக்கு தலா ரூ. 1.50 லட்சம் வீதம் ரூ. 3 லட்சமும் என மொத்தம் ரூ. 40.50 லட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டது. ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி இவற்றை வழங்கினாா்.

தொடா்ந்து, கரோனா சிறப்பு நிதிக்காக, மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கூட்டமைப்பின் சாா்பில் ரூ. 1.12 லட்சமும், மாத்தூா் தொழில்பேட்டை உற்பத்தியாளா்கள் சாா்பில் ரூ. 60 ஆயிரமும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

அப்போது, மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் திரிபுரசுந்தரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com