கரோனா சிகிச்சை பெற்று வந்த புதுகை அரசு மருத்துவா் பலி
By DIN | Published On : 27th September 2020 11:34 PM | Last Updated : 27th September 2020 11:34 PM | அ+அ அ- |

டாக்டா் எஸ். முஜிபூா் ரகுமான்.
திருச்சி தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த அரசு மருத்துவா் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை பல்லவன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் டாக்டா் எஸ். முஜிபூா் ரகுமான் (47). சிறுநீரகக் கோளாறு இருந்து வந்ததால், புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இவா் நீண்ட விடுப்பில் இருந்துவந்தாா்.
இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனா்.