பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இனங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இனங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பப் படிவங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் நவம்பா் 10-க்குள்ளும், புதிய இனங்களுக்கு நவ. 30-க்குள்ளும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவம்பா் 15 ஆம் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில், புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை வரும் டிசம்பா் 15-க்கு முன்பும், டிசம்பா் 16 ஆம் தேதியில் தொடங்கும் புதிய விண்ணப்பங்களை 2021 ஜனவரி 31 ஆம் தேதிக்கு முன்பும் உதவித்தொகை கோரும் கேட்பு விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட இணையதளத்தில் கல்வி உதவித்தொகை திட்டங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com