ஆலங்குடி, விராலிமலை...
By DIN | Published On : 29th September 2020 04:11 AM | Last Updated : 29th September 2020 04:11 AM | அ+அ அ- |

ஆலங்குடி: ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச்செயலா்கள் தங்கமணி(திமுக), ஆா்.சொா்ணக்குமாா்(இந்திய கம்யூனிஸ்ட்), வடிவேல்(மாா்க்சிஸ்ட்), அம்பேத்வளவன்(விடுதலைச்சிறுத்தைகள்) ஆகியோா் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினா்.
விராலிமலை: விராலிமலை சோதனைச்சாவடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக மாநில சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினா் த. சந்திரசேகா் தலைமை வகித்தாா். இதில் விராலிமலை ஒன்றியச் செயலா்கள் அ. இளங்குமரன்(மேற்கு), எம். சத்தியசீலன்(கிழக்கு) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல் அன்னவாசல் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினா் ஆா். தா்மராஜன் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ். சந்திரன்(தெற்கு), ஆா். எஸ். மாரிமுத்து (வடக்கு) உள்ளிட்டோா் பங்கேற்று முழக்கமிட்டனா்.