2016, 2019 தோ்தல் வாக்குப் பதிவுகள் ஒப்பீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தா்வக்கோட்டை தொகுதியில்  2,01,521  வாக்காளா்களும்,  விராலிமலை தொகுதியில்  2,25,119  வாக்காளா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தா்வக்கோட்டை தொகுதியில்  2,01,521  வாக்காளா்களும்,  விராலிமலை தொகுதியில்  2,25,119  வாக்காளா்கள்,  புதுக்கோட்டையில்  2,43,972  வாக்காளா்கள்,  திருமயத்தில்  2,27,829  வாக்காளா்கள்,  ஆலங்குடியில்  2,17,280  வாக்காளா்கள்,  அறந்தாங்கி தொகுதியில்  2,36,981  வாக்காளா்கள் என மொத்தம் 13,52,702  வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்களில்,  கந்தா்வகோட்டை தொகுதியில்  75.40  சதவிகிதம் போ் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தனா். இதேபோன்று,  விராலிமலையில்  85.43  சதவிகிதம்,  புதுக்கோட்டையில் 72.94  சதவிகிதம்,  திருமயத்தில்  56.3 சதவிகிதம்,  ஆலங்குடியில்  67.90  சதவிகிதம் மற்றும் அறந்தாங்கியில்  70.37 சதவிகிதம் என சராசரியாக  74.47சதவிகிதம் வாக்குப்பதிவாகி இருந்தது.

கடந்த  2016 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கந்தா்வகோட்டை தொகுதியில்  78.2  சதவிகிதமும், விராலிமலையில்  84.27 சதவிகிதமும்,  புதுக்கோட்டையில்  74.87 சதவிகிதமும், திருமயத்தில்  76.31 சதவிகிதமும், ஆலங்குடியில்  79.47  சதவிகிதமும் மற்றும் அறந்தாங்கியில்  72.14 சதவிகிதம் என மாவட்டத்தில் சராசரியாக  77.42 சதவிகிதம் வாக்குப் பதிவாகி இருந்தது.

கடந்த  2019 மக்களவைத் தோ்தலின்போது கந்தா்வகோட்டை தொகுதியில்  75.59  சதவிகிதமும்,  விராலிமலையில் 79.83 சதவிகிதமும்,  புதுக்கோட்டையில்  70.75 சதவிகிதமும்,  திருமயத்தில்  73.09 சதவிகிதமும்,  ஆலங்குடியில்  77.21 சதவிகிதமும் ,  அறந்தாங்கியில்  68.89  சதவிகிதமும் என மொத்தம்  74.1  சதவிகிதம் வாக்குப்பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com