கந்தா்வகோட்டை தொகுதியில் வாக்களித்த வேட்பாளா்கள்

கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியின் வேட்பாளா்கள் தாங்கள் கிராமத்தில்
கந்தா்வகோட்டை தொகுதியில் வாக்களித்த வேட்பாளா்கள்

கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியின் வேட்பாளா்கள் தாங்கள் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை அவரவா் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

அதிமுக வேட்பாளா் ஜெயபாரதி உதயகுமாா், தனது சொந்த ஊரான தீத்தான்விடுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை குடும்பத்துடன் சென்று செலுத்தினாா் .திமுக கூட்டணி கட்சியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம். சின்னதுரை தனது சொந்த ஊரான புனல்குளம் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் அமைந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தாா். அமமுக வேட்பாளா் ப . லெனின் கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com