ஏப். 11 முதல் தொழிற்சாலைகளில் கரோனா தடுப்பூசி போடும் பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமாா் 9 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமாா் 9 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளில் தடுப்பூசி போடுவது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் மேலும் கூறியது:

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கே நேரடியாகச் சென்று கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வரும் ஏப். 11ஆம்தேதி முதல் தொடங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டுள்ளனா். அந்தந்தத் தொழிற்சாலைகளிலேயே தினமும் பணிக்கு வரும் பணியாளா்களுக்கு வெப்பநிலை பரிசோதிக்கும் பணிகளும், முகக்கவசம் அணிந்து வேலை செய்வதையும் தனிநபா் இடைவெளி விட்டு பணியாற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனிநபா் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இவற்றைத் தவறாது கடைபிடித்தால் கரோனா இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டையை உருவாக்க முடியும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் உமா மகேஸ்வரி.

கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் திரிபுரசுந்தரி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் டாக்டா் கலைவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com