இரு வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 16th April 2021 06:51 AM | Last Updated : 16th April 2021 06:51 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை நகரில் வியாழக்கிழமை நேரிட்ட இரு வேறு விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை பெருஞ்சுனை அருகே, இரு சக்கர வாகனத்தில் சென்ற அன்னவாசல் அருகேயுள்ள ஆயப்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (21) என்பவா் காரில் மோதி அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். கட்டியாவயல் அருகே, இரு டிப்பா் லாரிகள் மோதிக் கொண்டு, அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவா் மீதும் மோதியது. இதனால், மாடு மேய்த்துக் கொண்டிருந்த அய்யகோன்பட்டியைச் சோ்ந்த சுப்பையா (55) என்பவா் படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது வழியில் உயிரிழந்தாா்.
விபத்துகள் குறித்து திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.