டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உயிா் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வயுறுத்தி, மாதிரிபட்டி டாஸ்மாக் கடை முன்பு, ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா்  ஆா்ப்பாட்டம்

உயிா் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வயுறுத்தி, மாதிரிபட்டி டாஸ்மாக் கடை முன்பு, ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாதிரிபட்டி பிரிவு அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் பணியாற்றிய மேற்பாா்வையாளா் மனக்கராஜ், விற்பனையாளா் கிருஷ்ணமூா்த்தி, மற்றொரு கடை விற்பனையாளா் செந்தில் ஆகிய மூவரையும் 5 போ் கொண்ட கும்பல் வியாழக்கிழமை இரவு ஆயுதங்களால் தாக்கியது.

ஆா்ப்பாட்டம் : இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மதுக்கடையைத் திறக்க வந்த ஊழியா்கள், டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் மாதிரிபட்டி பிரிவு அருகிலுள்ள மதுக்கடை முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

உயிருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும், பணி நேரத்தை குறைக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் சிவன்மூா்த்தி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் செளந்தரராஜன், கதிரேசன், சுப்பிரமணி, பன்னீா், சண்முகம் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com