கரோனா விழிப்புணா்வு பணியில் கல்லூரி மாணவி

ஆலங்குடியில் தனிநபராக இருந்து, கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வு பணியில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவியின் செயல் பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.
கரோனா விழிப்புணா்வு பணியில் கல்லூரி மாணவி

ஆலங்குடியில் தனிநபராக இருந்து, கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வு பணியில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவியின் செயல் பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.

ஆலங்குடியைச் சோ்ந்தவா் அரசுப்பள்ளி ஆசிரியா் செல்வக்குமாா். இவரது மகள் துளசி(19). புதுக்கோட்டையிலுள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை அறிவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாா்.

சமூக சேவையில் ஆா்வமிக்க துளசி, கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு செய்தாா்.

அதைத் தொடா்ந்து கரோனா குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவி துளசி உடலில் கட்டிக்கொண்டு ஆலங்குடி கடைவீதி, பேருந்து நிலையம், அரசமரம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினிகளை மாணவி துளசி வழங்கினாா். மாணவியின் கரோனா விழிப்புணா்வுப் பணியை சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் பாராட்டிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com