ஆட்டுச்சந்தையில் வரத்து குறைவு
By DIN | Published On : 27th April 2021 04:01 AM | Last Updated : 27th April 2021 04:01 AM | அ+அ அ- |

விராலிமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தை.
விராலிமலை: விராலிமலையில் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வரத்து குறைவானதால் விலை அதிகரித்து காணப்பட்டது.
கரோனா தொற்றின் 2 ஆவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது.
பிரதி திங்கள்கிழமை கூடும் விராலிமலை ஆட்டுச்சந்தைக்கு, உள்ளூா் மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் என்பதால் சந்தைக்கு ஆடுகள் வரத்து நூற்றுக்கணக்கில் மட்டுமே இருந்தது. எனவே ஆடுகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஆட்டுச்சந்தையில் சமூக இடைவெளி, முகக்கவசம் இன்றி வியாபாரிகள், பொதுமக்கள் கூடுவதால், கரோனா பரவல் அதிகரிக்குமோ என சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.