கந்தா்வகோட்டை பகுதியில் முந்திரி விளைச்சல் பாதிப்பு
By DIN | Published On : 27th April 2021 04:00 AM | Last Updated : 27th April 2021 04:00 AM | அ+அ அ- |

img-20210426-wa0016
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை பகுதிகளில் பயிரிட்டுள்ள முந்திரி, பூக்களாக இருக்கும்போதே கருகி வருவதால் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, துருசுப்பட்டி, முதுகுளம், அரியாணிப்பட்டி, கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கா் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரி பயிரான முந்திரி பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் பூ பூத்துக் காய் காய்க்கும். ஆண்டுதோறும் விளைச்சல் குறைந்து வரும் நிலையில் நிகழாண்டு பருவநிலை மாற்றத்தால் முந்திரி மரங்களில் பூத்து பூக்கள் கருகி கொட்டி விடுவதால் காய் காய்ப்பது குறைந்து வருகிறது. இதனால், முந்திரி விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நூறு ஏக்கருக்கும் மேலாக முந்திரி மரம் இருந்து வந்த நிலையில், தற்போது மாற்றுப் பயிராக தைல மரங்களை விவசாயிகள் நட்டு வருகின்றனா்.
Image Caption
படம்.1.கே.வி.கே. ~படம்.2.கே.வி.கே.