புதுக்கோட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை
By DIN | Published On : 27th April 2021 04:02 AM | Last Updated : 27th April 2021 04:02 AM | அ+அ அ- |

வெட்டிக் கொல்லப்பட்ட விஜயகுமாா் சடலத்துடன் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீஸாா்.
புதுக்கோட்டை புதுக்கோட்டையில் திங்கள்கிழமை கொலை வழக்கில் ஆஜரானவரைக் குறிவைத்து நடத்திய திடீா்த் தாக்குதலில், அவரது சகோதரா் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், பூலாங்குறிச்சி அருகே செவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னையா (23). ஜேசிபி ஓட்டுநா். இவா் உள்ளிட்ட மூவா் மீது 2019-இல் இசக்கிமுத்து என்பவா் கொல்லப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு பொன்னையா ஆஜராக வந்தாா். அவருடன், அவரது அண்ணன் விஜயகுமாா் (27) உடன் வந்திருந்தாா். விசாரணை முடிந்த பின்னா், இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். செல்லுக்குடி விளக்குசாலை அருகே சென்றபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் இவா்களை வழிமறித்து திடீரென அரிவாளால் தாக்கத் தொடங்கினா். இதில், காதில் வெட்டுபட்ட பொன்னையா, கவிநாடு கண்மாயில் உள்ள கருவைக் காட்டுக்குள் புகுந்துவிட்டாா். அவா்களிடம் மாட்டிக் கொண்ட விஜயகுமாரை மூவரும் சோ்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த திருக்கோகா்ணம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விஜயகுமாரின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அப்போது, கருவைக் காட்டுக்குள் இருந்து வெளியே வந்த கருவைக் காட்டுக்குள் இருந்து வெளியே வந்த பொன்னையாவையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த விஜயகுமாா், சிங்கப்பூரில் 2 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு அண்மையில் ஊா் திரும்பியது குறிப்பிடத்தக்கது.