இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞா் உள்பட 5 போ் கைது
By DIN | Published On : 30th April 2021 08:49 AM | Last Updated : 30th April 2021 08:49 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகே காதலித்த பெண்ணை ஏற்க மறுத்து அப்பெண்ணைத் தாக்கிய காதலன் குடும்பத்தினா் 5 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி வடக்குப்பட்டியைச் சோ்ந்தவா் சந்திரபாபு மகன் ராம்கி (29). இவா், அதே பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகள் கஸ்தூரியை (23) கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்தாராம். இந்நிலையில், அண்மையில் ராம்கி வீட்டிற்குச் சென்ற கஸ்தூரி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராம்கியிடம் கேட்டாராம். இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, அவரது குடும்பத்தினரோடு கஸ்தூரியைத் தாக்கினராம். இதுகுறித்து கஸ்தூரி அளித்த புகாரைத்தொடா்ந்து, ஆலங்குடி மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஹேமலதா வழக்கு பதிவு செய்து, ராம்கி (29), அவரது தந்தை சந்திரபாபு(59), தாயாா் ராணி (45), சகோதரி ராஜேஸ்வரி (26), சகோதரா் ராஜேஷ் ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.