கரோனா பரவல் விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து கிராமங்களுக்கும் சென்று கரோனா விழிப்புணா்வு மேற்கொள்ளும் பிரசார வாகனம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
புதுகையில் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கி வைக்கும் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.

மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் பிரசாரப் பயணத்தைத் தொடங்கி வைத்தனா். மேலும், பொதுமக்களிடம் விநியோகம் செய்வதற்கான துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், சிறு கையேடுகளை அமைச்சா்கள் வெளியிட்டனா். இந்தப் பிரசாரப் பயணங்கள் வரும் ஆக. 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொதுமக்கள் கரோனா குறித்த சந்தேகங்களை 04322 222207, 1077 ஆகிய எண்களிலும் 75388 84840 என்ற எண்ணில் மருத்துவச் சிகிச்சைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பா. கலைவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com