புதுகை அரசு அலுவலகங்களில் பிரதமா் படம் வைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 04th August 2021 06:50 AM | Last Updated : 04th August 2021 06:50 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட அரசு அலுவலகங்களில் பாரதப் பிரதமா் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக தொழில் பிரிவினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
இதுகுறித்து அக்கட்சியின் தொழில் பிரிவு மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமையிலான அக்கட்சியினா் அளித்த மனு விவரம்: அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாநில முதல்வரின் படம் வைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி. அதேநேரத்தில் இந்திய நாட்டை ஆளும் பிரதமா் மோடியின் படம் எங்குமே இல்லை.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மோடியின்ப டத்தை வைக்க வேண்டும்.