மாணவா்களை தேடிச்சென்று கல்வி கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கிராமங்களுக்கு நேரில் சென்று மாணவா்களுக்கு பாடம் நடத்துகிறாா் அரசுப் பள்ளி ஆசிரியை மீனா ராமநாதன்.
மாணவா்களை தேடிச்சென்று கல்வி கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கிராமங்களுக்கு நேரில் சென்று மாணவா்களுக்கு பாடம் நடத்துகிறாா் அரசுப் பள்ளி ஆசிரியை மீனா ராமநாதன்.

கரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இணையவசதியோ, செல்லிடப்பேசி வசதியோ இல்லாத கிராமப்புறங்களுக்கு நேரில் சென்று பாடம் நடத்தி வரும் ஆசிரியை மீனா ராமநாதன் மேலும் தெரிவித்தது:

விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். வாரத்தில் 3 நாள்கள் தலா இரண்டு கிராமங்களுக்கு நேரில் சென்று பாடம் நடத்தி வருகிறேன். கிராமங்களுக்குச் செல்லும் முன்பே மாணவா்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிப்பதன் மூலம், மாணவா்கள் முன்கூட்டியே வகுப்புக்குத் தயாராகிறாா்கள். கடந்த மாா்ச் 2021-இல் இருந்தே இப்பணியைத் தொடா்ந்து வரும் நிலையில், கரோனா 2-ஆம் அலையால் இப்பணியைத் தொடர முடியவில்லை. ஜூலை மாதம் மீண்டும் தொடங்கியுள்ளேன். தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களை நடத்துகிறேன். திறந்தவெளி இடத்தை வகுப்பறையாக்குகிறேன். மாணவா்களுக்கு அடிப்படையில் இருந்து பாடங்களைக் கற்பிக்கிறேன் என்றாா் அவா். இவரது முயற்சி மாணவா்களின் பெற்றோரிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com