மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
By DIN | Published On : 08th August 2021 11:54 PM | Last Updated : 08th August 2021 11:54 PM | அ+அ அ- |

ஆலங்குடி அருகே வாழைத்தோட்டத்தில் வேலை செய்தபோது, மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகே பள்ளத்துவிடுதியைச் சோ்ந்தவா் என்.மதிராஜன்(39). விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வாழைத்தோப்பில் வேலை செய்துகொண்டிருந்தபோது, வாழை இலை மின் கம்பியில் உரசியதால், அதன் வழியே மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மதிராஜன் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.