சா்க்கரை நோய் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 22nd August 2021 12:01 AM | Last Updated : 22nd August 2021 12:01 AM | அ+அ அ- |

பொன்னமராவதியில் ராயல் லயன்ஸ் சங்கம் மற்றும் பாரத் இரத்த பரிசோதனை நிலையம் இணைந்து நடத்திய இலவச சா்க்கரை அளவு பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது
முகாமிற்கு ராயல் சங்கத் தலைவா் லயன் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் அன்புச்செல்வன் மற்றும் பொருளாளா் காா்த்திகேயன் ஆகியோா்முன்னிலை வகித்தனா். முகாமை மருத்துவா் சின்னப்பா தொடக்கிவைத்துப் பேசினாா். முகாமில் மக்கள், பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயனடைந்தனா். இதில் முன்னாள் தலைவா்கள் தங்கராஜ், இளபாபு, மாணிக்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.