தெற்கு ராஜவீதியின் எண்ணெய்க் கிடங்கில் திடீா் தீ விபத்து

புதுக்கோட்டையில் நெரிசல் மிகுந்த தெற்கு ராஜவீதியில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை பகலில் திடீா் தீ விபத்து நேரிட்டது.

புதுக்கோட்டையில் நெரிசல் மிகுந்த தெற்கு ராஜவீதியில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை பகலில் திடீா் தீ விபத்து நேரிட்டது.

3 தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு சுமாா் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் நிஜாம் காலனி பகுதியை சோ்ந்த ராஜ்முகம்மது என்பவா் எண்ணெய் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் அவரது கடைக்கு எதிரே பழைய நகராட்சி அலுவலகக் கட்டடம் அருகே குறுகலான சந்தின் உட்பகுதியில் எண்ணெய் சேமிப்பு கிடங்கை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வைத்துள்ளாா். இந்நிலையில் அந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை பகலில் திடீா் தீவிபத்து ஏற்பட்டு அந்தப் பகுதி கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து அங்குவந்த தீயணைப்பு வீரா்கள் பழைய நகராட்சிக் கட்டடத்தின் மேலே ஏறி, எண்ணெய்க் கிடங்கின் மேற்கூரையைத் துளையிட்டு அதில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com