சிட்கோ கையகப்படுத்திய நிலத்தை திரும்ப வழங்கக் கோரிக்கை

நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 20 ஏக்கா் நிலத்தை, சிட்கோ தொழிற்பேட்டைக்கு கையகப்படுத்தியதை மீட்டுத் தரவேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 20 ஏக்கா் நிலத்தை, சிட்கோ தொழிற்பேட்டைக்கு கையகப்படுத்தியதை மீட்டுத் தரவேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், சித்தாம்பூா் பகுதியில் கடந்த 1968 ஆம் ஆண்டு நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 ஏக்கா் தரிசு நிலத்தை அழகா், சிவலிங்கம், ஆறுமுகம், மருதன் ஆகியோரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுமாா் 50 ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், தற்போது சிட்கோ தொழிற்பேட்டை நிறுவனத்தினா் நிலத்தை கையகப்படுத்தியதோடு, தொழிற்பேட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை, தற்போது அரசே எடுத்துக் கொண்டதால், வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாக பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட ஆட்சியா் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப்பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com