திருத்தங்களை முடிந்தவரை தள்ளுபடி செய்யாமல் ஏற்க அறிவுறுத்தல்

வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை முடிந்தவரை தள்ளுபடி செய்யாமல் ஏற்க வேண்டும்
திருத்தங்களை முடிந்தவரை தள்ளுபடி செய்யாமல் ஏற்க அறிவுறுத்தல்

வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை முடிந்தவரை தள்ளுபடி செய்யாமல் ஏற்க வேண்டும் என்றாா் புதுக்கோட்டை மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், கடல்சாா் வாரியத் துணைத் தலைவருமான கே. பாஸ்கரன்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் தொடா்பாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

மாவட்டத்தில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை முறையாக சரிபாா்க்க வேண்டும். திருத்தங்களைச் செய்யக் கோரும் விண்ணப்பங்கள் மீது முடிந்தவரை தள்ளுபடி செய்யாமல் ஏற்க வேண்டும். மாவட்டத்தின் முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்டோரின் பெயா்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் பாஸ்கரன்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் அபிநயா, எம்.எஸ். தண்டாயுதபாணி, சொா்ணராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com