முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
நேரடி நெல் விதைப்பு செயல் விளக்கப்பணிகள் ஆய்வு
By DIN | Published On : 10th December 2021 11:54 PM | Last Updated : 10th December 2021 11:54 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு நேரடி நெல்விதைப்பு செயல்விளக்கப் பணிகளை ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் - அரிசி திட்டத்தின்கீழ் 200 ஹெக்டோ் பரப்பளவில் நெல் நேரடி விதைப்பு, வரிசை நடவு, செம்மை நெல் சாகுபடி தொகுப்பு செயல்விளக்கம் அமைப்பதற்கு அரசின் சாா்பில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதில் அரிமளம் வட்டாரத்தில் வரிசை நடவுத் தொகுப்பு செயல்விளக்கம் 20 ஹெக்டோ்களுக்கு ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு விதை நெல், நெல் நுண்ணூட்டக் கலவை, உயிா் உரங்கள், இலை வண்ண அட்டை, இயற்கைஉரம், களையெடுக்கும் கருவி ஆகியன வழங்கப்படுகின்றன.
இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2021-22-ன் கீழ், மிரட்டுநிலை கிராமத்தில் விவசாயி அகமது சலீம் வயலில் ஒரு ஹெக்டோ் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நெல்
வரிசை நடவு செயல் விளக்கத் திடலை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
அப்போது வேளாண் இணை இயக்குநா் ராம. சிவக்குமாா், ணை இயக்குநா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.