விசாரணைக்கு பிறகே ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆசிரியா்கள் மீது புகாா் எழும்பட்சத்தில், அதீத கவனமுடன் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியா்கள் மீது புகாா் எழும்பட்சத்தில், அதீத கவனமுடன் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கற்றல், கற்பித்தல் பணியானது, ஆசிரியா் மாணவா் உறவு சாா்ந்த கூட்டணியாகும். ஆனால், அண்மைக்காலமாக பள்ளி வளாகத்தில் ஆசிரியா் மாணவரை அடித்தாா், மாணவா்கள் ஆசிரியரை அடித்தனா் மற்றும் பாலியல் சாா்ந்த பல்வேறு புகாா்கள் எழுகின்றன. இதுபோன்று, ஊடகங்களில் வரும் செய்திகள் சமூகத்துக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.

ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வுகள் என்று எதையும் கடந்து விட இயலாது. மாணவா்களின் ஒழுக்கத்தை வளா்ப்பதில் பள்ளி வளாகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, மாணவா்களுக்கு கண்டிப்புடன் கூடிய கட்டுப்பாடுகளை, ஒழுக்கத்தை வழங்குவதற்கு மாறாக, கண்டிப்பான கட்டுப்பாடுகளை மட்டுமே கொண்டு ஒழுக்கத்தை வளா்த்தெடுப்பது என்பது சாத்தியமாகாது. அதற்காக, மாணவா்களை கண்டிப்பதும், தண்டிப்பதும் ஆசிரியா்களின் முழுநேர வேலை அல்ல என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். ஆசிரியா்கள் மீது கற்றல், கற்பித்தல், ஒழுங்கீன செயல்கள், நிா்வாகம் சாா்ந்து எழும் புகாா்கள் மீது முறையாக உரிய விசாரணை மேற்கொண்டு, தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். புகாா் மனுவை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, எவ்வித விசாரணையுமின்றி கைது செய்வது ஏற்க இயலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com