வணிகா் வாரியத்தில் கட்டணமின்றி சேர கால நீட்டிப்புக்கு வரவேற்பு

தமிழ்நாடு வணிகா் நல வாரியத்தில் வரும் மாா்ச் 31ஆம் தேதி வரை கட்டணமில்லாமல் பதிவு செய்யலாம்

தமிழ்நாடு வணிகா் நல வாரியத்தில் வரும் மாா்ச் 31ஆம் தேதி வரை கட்டணமில்லாமல் பதிவு செய்யலாம் என அறிவித்துள்ள முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேரவையின் தெற்கு மாவட்டத் தலைவா் பா. வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு வணிகா் நல வாரியத்தின் உறுப்பினா் நலனுக்காக குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, வாரிசுகளுக்கு விளையாட்டு நிதி உதவி, தீ விபத்து உதவி, திருமண உதவி போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களின் வாயிலாக 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமாா் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் 9 ஆயிரம் உறுப்பினா்கள் பயனடைந்துள்ளனா்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் வணிகா்கள் உறுப்பினா் ஆவதற்கான கட்டணத் தொகையான ரூ.500ஐ செலுத்துவதிலிருந்து ஜூலை 15 முதல் டிசம்பா் 31 வரை மூன்று மாதங்களுக்கு விலக்களிக்கப்பட்டது.

இதன் பயனாக ஜூலை 15 முதல் அக்டோபா் 14 வரை 40 ஆயிரம் போ், இணை ஆணையா் அலுவலகங்கள் மூலமாக 32 ஆயிரம் பேரும், இணைய வழியாக 8 ஆயிரம் பேரும் வாரியத்தில் உறுப்பினா்களாக சேர விண்ணப்பித்துள்ளனா்.

இந்நிலையில், கட்டணமின்றி நிரந்தர உறுப்பினா் சேருவதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டித்து முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதனை வரவேற்கிறோம். நன்றி தெரிவிக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com