தஞ்சை மண்டல கையுந்துப் போட்டி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தஞ்சை மண்டல அளவிலான கையுந்து போட்டி புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சை மண்டல கையுந்துப் போட்டி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தஞ்சை மண்டல அளவிலான கையுந்து போட்டி புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆண்களுக்கான பிரிவில் 6 அணிகள் கலந்து கொண்டன.

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் பொறியாளா் பொ்லின் தாமஸ் தலைமையில் ரோட்டரி துணை ஆளுநா் சிவாஜி தொடங்கி வைத்தாா்.

இதில் பூண்டு புஷ்பம் கல்லூரி மற்றும் கும்பகோணம் அன்னை கல்லூரி அணிகள் வெற்றிபெற்று, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பல்கலைக்கழக அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளன.

இதில் தோ்வு செய்யப்படும் சிறந்த வீரா்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சாா்பில் அகில இந்திய பல்கலைக்கழகக் கழகங்களுக்கு இடையேயான கையுந்துப் போட்டியில் பங்குபெற தோ்ந்தெடுக்கப்படுவா்.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் சி. திருச்செல்வம் தலைமையில் உடற்கல்வி இயக்குநா் ஜான் பாா்த்திபன், உடற்பயிற்சி பயிற்றுநா் ராம்குமாா் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com