துப்புரவாளா்களுக்கு பயிற்சி முகாம்

விராலிமலையில் துப்புரவு பணியாளா்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

விராலிமலையில் துப்புரவு பணியாளா்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை - மதுரை நான்கு வழிச்சாலை அருகே நுண்ணுயிா் உரக்கிடங்கு (மைக்ரோ கம்போஸ்ட் சென்டா்) ரூ. 20 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கிடங்கில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி விராலிமலை ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை

ஊராட்சி துப்புரவு பணியாளா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் கி. ரமேஷ் (கிளை ஊராட்சி), ஆா். ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் எம். ரவி, துணைத் தலைவா் சி. தீபன் சக்கரவா்த்தி முன்னிலை வகித்தனா். இதில், பங்கேற்ற பொறியாளா் ராஜசேகா் குப்பைகளை தரம் பிரிப்பது, உரம் ஆக்குவது குறித்து துப்புரவு பணியாளா்களுக்கு விளக்கம் அளித்தாா். ஏற்பாடுகளை ஊராட்சிச் செயலா் சோமேஸ்கந்தா், அலுவலகப் பணியாளா்கள் சரஸ்வதி, சாந்தி, திருப்பதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com