வாக்காளா் பட்டியல் திருத்த மனுக்கள் மீது விசாரணை

விராலிமலையில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது வியாழக்கிழமை நேரடி விசாரணை நடத்தப்பட்டது.

விராலிமலையில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது வியாழக்கிழமை நேரடி விசாரணை நடத்தப்பட்டது.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் அண்மையில் நடைபெற்றது. இந்த முகாம்களில் முகவரி திருத்தம் தொடா்பாக படிவம் 8-ன் மூலம் பெறப்பட்ட மனுக்களை நேரடியாக ஆய்வு செய்து உண்மைத்தன்மை கண்டறியும் பணியை வியாழக்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.எஸ்.தண்டாயுதபாணி தொடங்கினாா். இதில் விராலிமலை தொகுதி பாகம் எண் 32-க்குட்பட்ட மண்டையூா் பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில் முகவரி மாற்றம் தொடா்பாக பெறப்பட்ட மனுதாரா்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று மனுதாரரிடம் முகவரி மாற்றம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது குளத்தூா் வட்டாட்சியா் பெரியநாயகி, தோ்தல் துணை வட்டாட்சியா் லலிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com