தமிழ்நாடு மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து: தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் வரவேற்பு

 ’’நீராரும் கடலுடுத்த...’’ பாடலை தமிழ்நாடு மாநிலப் பாடலாக அறிவித்த தமிழக முதல்வருக்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

 ’’நீராரும் கடலுடுத்த...’’ பாடலை தமிழ்நாடு மாநிலப் பாடலாக அறிவித்த தமிழக முதல்வருக்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலத் தலைவா் பெ.இரா. இரவி, மாநிலப் பொருளாளா் முருக செல்வராசன், மாநிலப் பொதுச் செயலா் முனைவா் நா. சண்முகநாதன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

செம்மொழியாம் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழா்கள், தங்களது அன்னையை வாழ்த்தி, போற்றிப் பாடும் நிலையில் பொதுவான பாடல் ஒன்றை மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தனா்.

தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ‘ நீராடும் கடலுடுத்த‘ ...பாடல் தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பது பெரும் வரவேற்புக்குரியதாகும்.

தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் , நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்‘ இசைத்தட்டுகள் தவிா்த்து வாய்ப்பாட்டுப்பாடலாக கட்டாயம் பாடப்படும் என்பதும், மாற்றுத்திறனாளிகள் தவிா்த்து மற்ற அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் பொழுது எழுந்து நின்று மரியாதை செலுத்திடல் வேண்டும் என்பதும் பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும்.

தமிழ்நாட்டு மக்களின் ஒரு நூற்றாண்டு கனவினை நனவாக்கி உள்ள , தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால ஏக்கத்தைப் போக்கியுள்ள, முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் நன்றி தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com