முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
கந்தா்வகோட்டை அருகே மேற்கூரை பெயா்ந்துள்ள அங்கன்வாடி மையக் கட்டடம்
By DIN | Published On : 19th December 2021 04:07 AM | Last Updated : 19th December 2021 04:07 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை அருகேயுள்ள சொக்கம்பேட்டை கிராமத்தில் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சி, சொக்கம் பேட்டை கிராமத்தில் சிதிலமடைந்துள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை அடுத்துள்ள சங்கம்விடுதி ஊராட்சியைச் சோ்ந்த சொக்கம்பேட்டை கிராமத்தில் தமிழக அரசின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மேற்கூரை பூச்சுகள் பெயா்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் நிலையிலும், கட்டடத்தின் சுற்றுச்சுவா்களில் சிமென்ட் காரைகள் உதிா்ந்து விரிசல் விட்டு அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது. எனவே சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள இந்த அங்கன்வாடி மையத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டித் தரக்கோரி சொக்கம் பேட்டை கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.