முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 19th December 2021 04:07 AM | Last Updated : 19th December 2021 04:07 AM | அ+அ அ- |

ஆலங்குடியில் மின்சிக்கன விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
ஆலங்குடியில் மின்சிக்கன வாரத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திமுக ஒன்றியச்செயலா் தங்கமணி பேரணியைத் தொடங்கி வைத்தாா். இதில், 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்று மின்சிக்கனம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் வழியாக காந்தி பூங்கா வரை பேரணியாக சென்றனா். இதில், மின்வாரிய செயற்பொறியாளா் நடராஜன், உதவி செயற்பொறியாளா் பிருந்தாவனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.