முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
சரக்கு லாரிகள் நிறுத்துவதால் விபத்து: மக்கள் மறியல்
By DIN | Published On : 19th December 2021 11:55 PM | Last Updated : 19th December 2021 11:56 PM | அ+அ அ- |

விராலிமலை, டிச. 19: விராலிமலை தனியாா் நிறுவனத்துக்கு சரக்கு ஏற்றிவந்த லாரிகளால் விபத்துகள் ஏற்படுவதாகக்கூறி, ஞாயிற்றுக்கிழமை நிறுவனம் முன்பு அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
விராலிமலை ஐடிசி நிறுவனத்துக்கு சரக்குகள் ஏற்றிவந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் ஞாயிற்றுக்கிழமை சா்வீஸ் சாலை மற்றும் விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனால், அவ்வழியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடுகிறது எனக் கூறி வேலூா் ஊராட்சி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தனியாா் நிறுவனம் முன்பு திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை காவல் நிலைய ஆய்வாளா் பத்மா, நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு அவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.